ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் முன்னாள் ராணுவத்தினர் தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்து

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாவட்ட சைனிக் நல வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஆளுநர் முன்னாள் ராணுவத்தினர் தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்து என்றும், நெருக்கடியான நேரத்திலும் அவர்கள் பணியாற்றியுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் குடும்பமாக ஒன்று கூடி கல்வி நிறுவனத்தை மேம்படுத்த பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர்களின் கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் பிரதமரின் உறுதிப்பாட்டை ஆளுநர் மீண்டும் வலியுறுத்தினார்.

பிறகு திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகிற்கு பெருமை சேர்ப்பதன் மூலம் திருக்குறள் மனித குலத்திற்கு திருவள்ளுவரின் தனித்துவமான மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பை பாராட்டினார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு தியானம் செய்து, இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த மாபெரும் தலைவரின் அர்ப்பணிப்பான சேவையை மீண்டும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: