திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ரூ.50 லட்சம், 926 கிராம் பக்தர்கள் காணிக்கை

பூந்தமல்லி: தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் முக்கியமானது. இங்கு சென்னை, புறநகர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கைகளை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எண்ணுவார்கள்.

இந்நிலையில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் பணியாளர்கள், பக்தர்கள் அளித்த காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. இதில் கோயில் இணை கமிஷனர் லட்சுமணன் தலைமை வகித்தார். வங்கி அதிகாரிகள் முன்பு பணம் எண்ணும் இயந்திரம் வைத்து  எண்ணப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம், 926 கிராம் தங்க நகைகள், 1710 கிராம் வெள்ளிப் பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். இவை, கோயில் நிர்வாகம் சார்பில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.   

Related Stories: