பேரவை தலைவர் அப்பாவு கேள்விகளுக்கு தீர்வு வேண்டும்; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநிலச் சட்டமன்றங்களின் தலைவர்கள் பங்கு ஏற்கும் 52வது மாநாட்டில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் தலைவர் அப்பாவு ஆற்றிய உரை பாராட்டுக்கு உரியது. அவர் தம் உரையில், மக்கள் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகள், பேரவையின் அதிகாரங்கள் செயல்பாடுகளை எடுத்துக்கூறி, இன்று சட்டமன்றங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

நாடாளுமன்ற, சட்டமன்றங்களை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்க முனைகின்றார்கள். படிப்படியாகக் குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறைக்குக் கொண்டு போக முனைகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். அவரது கருத்துகளை, ம.தி.மு.க ஆதரிக்கின்றது. இதுகுறித்து, அனைத்து இந்திய அளவில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வேண்டும். அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: