திருக்கோவிலூர் அருகே தொடர் மழையால் கோட்டமருதூர் சாலை துண்டிப்பு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே சுமார் 7 கிலோமிட்டர் தொலைவில் கோட்டமருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் கோட்டமருதூர் ஏரி முழு கொள்ளவை எட்டியதால் அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் கோட்டமருதூர் சாலையில் அதிகளவில் வெளியேறுவதால் தரைப்பாலம் அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.

இந்த சாலையை கோட்டமருதூர், கொடுக்கப்பட்டு, ஆதிச்சனூர், மதுராம்பட்டு, வேளாகுளம் ஆகிய கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோட்டமருதூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடுதலாக 5 கிலோமீட்டர் ஆடூர் கொளப்பாக்கம் வழியாக மாற்று வழியில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், மழைநீரால் சாலை வேகமாக அரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் ஆபத்தை உணராமல் அங்குள்ள இளைஞர்கள் மீன்பிடித்து வருகின்றனர். ஆகையால் போர்க்கால அடிப்படையில் புதிய தரைப்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: