வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை, தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நவம்பர் 24, 25, 26 தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதனையடுத்து தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் நவ.25 முதல் 27 வரை சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புழலில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சோழவரம், பந்தலூரில் தலா 7 செ.மீ, மற்றும் காமாட்சிபுரம், தேவாலா, சிவகிரி, உடுமலைப்பேட்டையில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை டிஜிபி அலுவலகம், எழிலகம், கூடலூர் பஜார், அவிநாசி, கோவிலாங்குளம், ஓமலூர் மற்றும் மேல் கூடலூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து சென்னை அய்யனவராம், தண்டையார்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, தூத்துக்குடி, பவானிசாகரில் தலா 3 செ.மீ மழை. தாத்தையாங்கார்பேட்டை, தண்டாரம்பேட்டை, தூத்துக்குடி துறைமுகம், கோபி, திருக்காட்டுப்பள்ளியில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: