100 வீடுகளில் வெள்ளநீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையில், பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலாற்றின் கரையோரம் உள்ள திம்மாவரம் மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், படவேட்டம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பாலாற்றின் கரையோரம் உள்ள மேலமையூர் ராமகிருஷ்ணா நகர், ஆத்தூர், வில்லியம்பாக்கம், பாலூர், மணப்பாக்கம், ஒழலூர், வல்லிவலம், வாயலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், சில நாட்களாக வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 27 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், தோட்டப் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமாகி உள்ளன. ‘‘சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏரிகளின் நீர் இருப்பை உறுதி செய்ய, அதன் கரைகளை பலப்படுத்தி பொதுப்பணி துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட  வேண்டும்’’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: