தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை: தொடர் மழையால் வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலும் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நேற்று ரூ.30க்கு விற்கப்பட்ட பச்சைமிளகாய் இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது.

அவரைக்காய் ரூ.80லிருந்து ரூ.110ஆகவும், வெண்டைக்காய் ரூ.60லிருந்து ரூ.80ஆகவும் மற்றும் கத்தரிக்காய் ரூ.45லிருந்து ரூ.65ஆகவும் அதிகரித்துள்ளது. தக்காளியின் விலையம் ரூ.100ஐ தாண்டியுள்ளது, அதேசமயம் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.    

Related Stories: