3 வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது: டிடிவி தினகரன் ட்வீட்

சென்னை: 3 வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது என டிடிவி தினகரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்;

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர்,வெயில்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. இதற்காக ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும்.

இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மேலும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்  எனக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: