கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை: காஞ்சி எம்பி வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின்நிலைய அணுவாற்றல் துறை இயக்குனருக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,’கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு கல்பாக்கம் அணுவாற்றல் துறை பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்பாக்கம் நகரியத்தில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு இடையூறாக மூடப்பட்ட வாயிற்கதவுகளை திறக்க வேண்டும். மேலும், கல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற மக்களை வஞ்சிக்கும் வகையிலான நிலா கமிட்டி நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

  மேலும், கல்பாக்கம் அணுவாற்றல் துறை பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சுற்றுப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட அணுவாற்றல் துறை இயக்குனர், எம்பி குறிப்பிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

Related Stories: