தமிழ் வளர்ச்சிக்கு நிரந்தர குழு அமைக்க கோரிய வழக்கு!: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிரந்தர குழுவை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.கனகராஜ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும், விமானங்களிலும் அறிவிப்புகளை தமிழில் மேற்கொள்ள வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும். அத்துடன் வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நிரந்தர குழுவை அமைக்கவும், தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும்.

சென்னையை மையமாக கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்புகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார். தமது கோரிக்கைகள் குறித்து துறை செயலர்களுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவிலை என்பது மனுதாரரின் குற்றச்சாட்டாகும். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. மனுதாரரின் கோரிக்கைகள் மீது 6 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: