சமத்துவ மக்கள் கழக மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பிறந்தநாள் விழா: 500 பேருக்கு சமபந்தி விருந்து

சென்னை: சமத்துவ மக்கள் கழக மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பிறந்தநாள் விழா இன்று காலை அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. துணை செயலாளர்கள் சோனை யாதவ், முகப்பேர் ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் கார்த்திக் நாராயணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கார்த்திக் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளையும் வழங்கினார். இதையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நலத்திட்ட உதவிகளை கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

வண்ணாரப்பேட்டை முகுந்தம்மன் கோயிலில், நாடார் பேரவை வடசென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன், கழக இளைஞரணி துணை செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சோலையப்பன் தெருவில் வடசென்னை மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், இளைஞரணி செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

பின்னர், கார்த்திக் நாராயணன் தலைமையில் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் 500க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. கோயம்பேடு அலெக்ஸ் ஏற்பாட்டில் மதுரவாயலில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சென்னை டீலக்ஸ், லீ பேலஸ் ஹோட்டல் நிறுவன ஊழியர்கள் சார்பில் கார்த்திக்குக்கு ஆளுயர மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது.

Related Stories: