தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்: உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு..!

சென்னை: தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு கலை - அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித் தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக உயர்கல்வித்துறை நியமித்துள்ளது.

தமிழகத்தில் தனியார், அரசு கல்லூரிகள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. பொதுவாக ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக உள்ள பேராசிரியர் அதற்கு முன்பு வேறு ஒரு தனியார் கல்லூரியில் உயரிய பதவியை பெற்று உள்ளவராக காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக முதல்வராக  நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார். ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரகம்பட்டி, வானூர் ஆகிய அரசு கல்லூரிகளுக்கும் கல்லூரி முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: