குற்றவியல் மற்றும் மாநகராட்சி வழக்குகளில் ஆஜராக சென்னை மாநகர வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: சென்னை மாநகர தலைமை குற்றவியல் வக்கீலாக ஜி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநகர அரசு பிளீடராக எஸ்.ஷாஜகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல்களாக முதலாவது கூடுதல் செஷன் நீதிமன்றத்திற்கு ஏ.கோவிந்தராஜன், 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு என்.மருதுகணேஷ், 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு டி.சுரேஷ், 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு டி.ரவிக்குமார், 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு எஸ்.பகவதிராஜ், 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கே.தேவபிரசாத், 7வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கே.கலைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.ஜே.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான கூடுதல் சிறப்பு நீதிமன்ற வக்கீலாக என்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், 15வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கூடுதல் குற்றவியல் வக்கீலாக ஜி.ஸ்ரீனிவாசன், 16வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு டி.மகாராஜன், 17வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கே.சுரேஷ், 18வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு என்.ஜெய்சங்கர், 19வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு என்.முத்துவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான (எஸ்சி., எஸ்டி) சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அல்லிகுளத்தில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்களில் 20வது நீதிமன்றத்திற்கு டி.ஆர்.கே.முத்துராமன், 21வது நீதிமன்றத்திற்கு பி.சுரேஷ், கூடுதல் அரசு பிளீடர் மற்றும் கூடுதல் குற்றவியல் வக்கீல்களாக எ.வெற்றிச்செல்வன், பி.செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக டி.பாபு, எம்.இ.துளசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: