பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மேல்மணம்பேடு, ஜமீன் கொரட்டூர் ஆகிய ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான டி.தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார், துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ஜெய்ஸ்ரீ லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் நிர்வாகிகள் இ.கந்தபாபு, கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், சுமதி விஜயகுமார், ஜி.சி.சி.கருணாநிதி, வெள்ளவேடு க.கோபிநாத், ஜி.பி.பரணிதரன், ஜி.சுகுமார், சர்மன்ராஜ், பிரவீன்குமார், மு.தே.ராஜேஷ், பிரதீப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, மேல்மனம்பேடு ஊரட்சியில் உள்ள இருளர் இன மக்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன்பிறகு மேல்மனம்பேடு ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் அந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியத்துக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: