60 நடமாடும் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்

குன்றத்தூர்: குன்றத்தூரில் மழைக்குப் பின் தொற்றுநோய் பரவலை தடுக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவ முகாம்களை நேற்று மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புகள், வயல்வெளிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. தற்போது மழை விட்ட நிலையில், பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மாலை குன்றத்தூர் பகுதியில் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடமாடும் மருத்துவ முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, 60-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவ முகாம்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: