“மை மெடிக்கல் ஷாப்”ஆன்லைன் மருந்தகம், மருத்துவ வசதி செயலி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரியில் “மை மெடிக்கல் ஷாப்’ ஆன்லைன் மருந்தகம் மற்றும் மருத்துவ வசதிகள் செயலி தொடக்கவிழா நடந்தது. இதில் மாநில முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த செயலியை தொடங்கி வைத்தார். மை மெடிக்கல்ஷாப் தலைமை நிர்வாக அதிகாரி ராஜராஜன் அறிமுக உரையாற்றினார். ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாரயணசாமி கேசவன் நன்றி கூறினார்.

எஸ்.எம்.வி ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட்டின் ஓர் அங்கமான மை மெடிக்கல்ஷாப் (MyMedicalShop.com), ஆன்லைன் மருத்துவ சேவையில் தடம் பதிக்க உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மருந்தகங்களில் ஒன்றான மை மெடிக்கல் ஷாப்பில் 365 நாட்களும், வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் வீட்டுக்கே சென்று மருந்து பொருட்களை விநியோகிக்கும் வசதி கொண்டது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன் மருந்தகத்தில் 1000-க்கும் அதிகமான பிராண்டுகளின் 15,000-க்கும் அதிகமான மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.

மை மெடிக்கல் ஷாப்பில், 26,000-க்கும் அதிகமான பின்கோடுகளுக்கு டெலிவரி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கே வந்து ரத்த பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள்  செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் மூலம் மருத்துவசேவை பெற்று கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. தரமான மருந்துகள் நியாயமான விலையில் வேகமான டெலிவரி சேவையை வழங்குகின்றது மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன் மருந்தகம். இணையதளம் மூலம் ஆர்டர் செய்து டெபிட், கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டி தொடங்கப்பட்ட மை மெடிக்கல் ஷாப்ஆன்லைன் மருந்தகம், 2 ஆண்டுகளில் சிறந்த மருந்தக சேவையை வழங்கும் முன்னணி மருந்தகங்களில் ஒன்றாக வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை என மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன் மருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜராஜன் தெரிவித்தார்.

Related Stories: