முட்டை தம் பிரியாணி

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்த முட்டையை அதில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த எண்ணெயில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் அதில் தயிர், கரம் மசாலா, Fried onion, முந்திரி, மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா, முட்டையை சேர்த்தால் கிரேவி ரெடி. அதில் பாதியை தனியாக எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் உள்ள கிரேவியின் மேல் வேக வைத்த அரிசியை பாதி போட்டு அதன்மேல் மீதியுள்ள முட்டை கிரேவி, நெய், Fried onion,  தூவி அதன்மேல் மீதியுள்ள வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் Fried onion, நெய், கொத்தமல்லி, புதினா, சிறிதளவு பிரியாணி மசாலா சேர்த்து 15 நிமிடம் தம் போடவும். இப்பொழுது சுவையான முட்டை தம் பிரியாணி தயார். இதனுடன் முட்டை கிரேவி மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.

Tags :
× RELATED தமிழகத்தை ஆள்வது பாமகவின் இலக்கு அல்ல: அன்புமணி பேச்சு