மழை பாதிப்புகளை சரி செய்ய வெளி மாவட்ட பொறியாளர்கள், ஆய்வாளர்கள் சாலைப்பணியாளர்கள் சென்னையில் முகாம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 6ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது. வெள்ளப்பெருக்கால் பாலங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு கோட்டங்களில் இருந்து சென்னை மாநகர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னையில் வெள்ள சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகாலில் உள்ள நீர் நுழைவு துவாரங்களில் (கிரேட்டிங்) அடைப்புகள் ஏதுமின்றி ெதாடர்ந்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. நீர் வழிந்தோடும் இடத்தையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: