தேசிய திறனடைவு கணக்கெடுப்பு தேர்வில் மொழிப்பாடத்தில் தமிழுக்கு பதில் இந்தி

புதுச்சேரி: பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட இடைவெளிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தேசிய திறன் கணக்கெடுப்பு தேர்வை (நாஸ்) நடத்தி வருகிறது. இந்தாண்டு இந்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. இந்த தேசிய திறனடைவுக் கணக்கெடுப்பு 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 313 பள்ளிகளில் 15,749 மாணவ, மாணவிகளிடம் நேற்று இந்த கணக்கெடுப்பு நடந்தது. 

இதில் சில பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் மொழிபாடமான தமிழ் இல்லை. அனைத்து கேள்விகளும் இந்தியில் இடம் பெற்றிருந்தது. அதேநேரத்தில் 10ம் வகுப்பில் மட்டும் மொழிபாடம் இருந்தது. இதை பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இந்தி கேள்விகளை தவிர்த்து மற்ற பாடத்திற்கான பதில் தருமாறு தெரிவித்தனர்.

Related Stories: