பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் உடைப்பை சீரமைக்கும் பணி மும்முரம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியது. இதனை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக சம்பா நேரடி விதைப்பு, நடவு மற்றும் தாளடி நடவு செய்த பயிர்கள் கட்டிமேடு வடிகால் வாய்க்கால் பகுதியில் சுமார் 30 அடி நீளம் வாய்க்கால் பகுதி கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளநீர் ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நிளை நிலங்களில் பாய்ந்ததால் சம்பா, தாளடி பயிர்கள் முழுவதும் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஏரி போல் காட்சியளிக்கிறது.

சம்பா நேரடி விதைப்பு, நடவு முழுவதுமாக மழைநீர் சூழ்ந்துள்ளது 10 ஏக்கர் தாளடி பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஒன்றியகுழு தலைவர் பாஸ்கர், ஆணையர்கள் சுப்பிரமணியம், சிவகுமார், ஒன்றிய பொறியாளர் சூரியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மகாலிங்கம், விவசாய சங்கதலைவர் கோவி சேகர் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அடைப்பதற்காக மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு அடைப்பை சரி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories: