காய்கறிகளின் விலையை குறைக்கவும் நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: தொடர் மழை காரணமாக உயர்ந்துள்ள காய்கறிகளின் விலையை குறைக்கவும், நடமாடும் காய்கறி கடைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் 6000 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளத்தில் மிதப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

மழையால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதால் விலையை குறைக்க நடமாடும் காய்கறி கடைகளை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் 48,000 நடமாடும் காய்கறி கடைகள் பத்தே நாட்களில் அமைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அதே போன்று காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட கூட்டுறவுத்துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.       

Related Stories: