பூண்டி நீர்த்தேக்கத்தை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சென்னை: சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் முக்கிய ஆறுகளின் குறுக்கே 100 தடுப்பு அணைகள் அமைக்கப்படும். அதில் திருவள்ளூர் மாவட்டத்திலும் கொசஸ்தலை, கூவம் மற்றும் ஆரணி ஆற்றுப்படுகைகளில் தடுப்பணை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் எந்த ஒரு இடத்திலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவில்லை. வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குடிமராமத்து பணியை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

அது குறித்த ஏரிகளின் பெயர் விவரமும் சட்டப்பேரவையில் கேட்டேன். ஆனால், எந்த ஏரிகள் என்று குறிப்பிடவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் பணிகள் மேற்கொண்டதாக தகவல் பலகை மட்டும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் முரளிதரன், செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ், திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் தா.கிருஷ்டி, கூளூர் எம்.ராஜேந்திரன், டி.தேசிங்கு, ச.மகாலிங்கம், மோ.ரமேஷ், சி.சு.ரவிச்சந்திரன், பூவை எம்.ரவிக்குமார், கே.அரிகிருஷ்ணன், ரவீந்திரா, மாவட்ட நிர்வாகிகள் மு.நாகன், கே.ஜெ.ரமேஷ், தா.மோதிலால், டாக்டர் குமரன், பா.ச.கமலேஷ், டி.கெ.பாபு, காஞ்சிப்பாடி சரவணன், கேஜிஆர்.ராஜேஷ், ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ், எம்.எஸ்.அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: