ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனமழையிலும் பல்வேறு இடங்கள் நீர் தேங்காத சூழல்: பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை: வில்லிவாக்கத்தில் தண்ணீர் சூழ்ந்த பகுதியை ஆய்வு செய்த  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது,  அதிமுக ஆட்சியில் பக்கீங்காம் கல்வாய் முடியும் எண்ணூர் பகுதியில் இருந்த அடைப்பை நவீன இயந்திரம் மூலம் அகற்றினோம். முந்தைய காலத்தில் வெள்ள நீரால் மூழ்கிய வடசென்னை  பகுதி  பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் தேங்காமல்  தவிர்க்கப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் வடிகால் அமைத்துள்ளோம். அதிமுக அரசின் நடவடிக்கையால் தான் தாழ்வான பகுதிகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் வடிகால்கள் அமைத்ததன் காரணத்தால் இன்று இந்த கனமழையிலும் பல்வேறு இடங்கள் நீர் தேங்காத சூழல் உள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னே தூர்வாரி இருக்க வேண்டும். வேண்டுமென்றே கமிஷன் வாங்கியதாக அவதூறு பரப்புகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி கமிஷன் வாங்கியதாக சொல்கிறார்களே. அதை இவர்கள் பார்த்தார்களா ? மக்கள் குறைகளை தான் தெரிவிக்கிறோம். அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் இல்லை. மூத்த ஐ எ ஏஸ் நியமனம் காலம் தாழ்ந்த நடவடிக்கை. முல்லை பெரியாறு பிரச்னை வாழ்வாதார, ஜீவாதார பிரச்னை என்றார். பின்னர் உயர்நீதிமன்றம் அதிருப்தி குறித்த நிரபர்களின் கேள்விக்கு 2015ம் ஆண்டிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செய்யப்பட்டு இருக்கிறது என பேசினார்.

Related Stories: