திருப்பதி கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாகசதுர்த்தியொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெறும். ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமனாகவும், மகாவிஷ்ணுவுக்கு படுக்கையாக சுவாமிக்கு சேவை செய்து வருகிறார் ஆதிசேஷன்.

இதனால் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்திலும் வீதியுலாவின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். இந்நிலையில்  நாகசதுர்த்தியையொட்டி நேற்றிரவு வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டப்படி மலையப்ப சுவாமியை தரிசித்தனர். இதில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பேஸ்கார் ஸ்ரீஹரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: