முல்லை பெரியாறு அணையுடன் பின்னிப்பிணைந்தது எனது வாழ்க்கை: ஓபிஎஸ் கருத்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலும், 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் 2021 வரை மாவட்ட அமைச்சர் என்ற முறையிலும் முல்லை பெரியாறு அணைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்த அனுபவம் எனக்கு உண்டு.

14 முறை நான் முல்லை பெரியாறு அணை பகுதிக்கு சென்று தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டு ஆய்வு செய்திருக்கிறேன். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடத்திற்கும் சென்று இல்லத்தின் வடிவத்தை மாற்றாமல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன்பேரில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. என்னுடைய வாழ்க்கையே முல்லை பெரியாறு அணையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். விவசாயிகளின் சந்தேகத்தை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசிற்கு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: