முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது.

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 3 முறை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியை உயர்த்தியவர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தியது அதிமுக. முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: