காவலர் வீர வணக்க நாள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிய 7 கி.மீ.தொலைவு சைக்கிள் பேரணி: 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: காவலர் வீர வணக்க நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்திடும் வகையில் நேற்று 7 கிலோ மீட்டர்தொலைவு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 125க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 தேதி பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்  போலீசாருக்கு “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில் கடந்த 21ம் தேதி முதல் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு அப்போது பணியின்போது இறந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

மேலும், காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சென்னையில் பல்வேறு இடங்களில் காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு, சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று தரமணி காவல் உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், ராமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் எஸ்ஆர்பி சந்திப்பில் இருந்து  திருவான்மியூர் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 7 கி.மீ தொலைவு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த சைக்கிள் பேரணியில் 125க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள், போலீசார், தன்னார்வாலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமை காவலர் ராஜா ஏற்பாட்டில் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

Related Stories: