புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் துறைக்கு 32 காவல் நிலையங்கள்: கூடுதலாக 7 காவல் நிலையங்கள் சேர்ப்பு

சென்னை: சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்றபடி தாம்பரம், ஆவடி, சென்னை என 3 மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைதொடர்ந்து 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று பிரித்து பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில் அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயிலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் தாம்பரம், குரோம்பேட்டை, கானாத்தூர் என சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம், மணிமங்கலம் என 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாநகரில் இருந்து பால் பண்ணை, செங்குன்றம், மணலி, சாந்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர் என சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் விலவங்காடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீன்சூர், காட்டூர் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆவடி மாநகர காவல் எல்லைக்குள் கூடுதலாக புதிதாக 7 காவல் நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக அயப்பக்கம், மவுலிவாக்கம், எர்ணாவூர், திருமழிசை, காமராஜர் துறைமுகம், காந்தி நகர் காவல் நிலையங்கள் என மொத்தம் 32 காவல் நிலையங்களாக எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: