காளான் தக்காளி பெப்பர் ஃப்ரை

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த தக்காளி, நறுக்கிய காளானைச் சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் 100-150 மி.லி. தண்ணீர் சேர்த்து காளானை வேக விட்டு, உப்பு சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: காளானுடன் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்க்கலாம். புளிப்பாக வேண்டுமென்றால் நாட்டுத்தக்காளியை பயன்படுத்தலாம்.

Tags :
× RELATED காலிபிளவர் மிளகு பொரியல்