நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார செலவு 27.39 லட்சம்

கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்துக்காக ரூ.27.39 லட்சம் செலவழித்தது தெரியவந்துள்ளது.சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினத் தொகை ரூ.30.80 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம்  நிர்ணயித்து இருந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தமிழக அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்த தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், பாஜ சார்பில்  தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.  இந்நிலையில் கமல்ஹாசன் தாக்கல் செய்த செலவின விவரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.27.39 லட்சம் செலவழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் பிரசாரத்துக்கான மேற்கண்ட மொத்த தொகையும் தனது சொந்த பணம் என குறிப்பிட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் ரூ.27.20 லட்சமும்,  மயூரா ஜெயகுமார் ரூ.24.13 லட்சமும் செலவழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: