முதல்வர் அறிக்கை முத்தரசன் பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை மதிப்புமிக்கதாகும். இந்த திட்டத்தில் மதவெறி நஞ்சை விதைக்கும் விபரீதம் ஏற்பட கூடும் என்பதை கருத்தில் கொள்ள கோரியிருந்தோம். மேலும் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவதில்லை என முதல்வர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாநில கல்வி கொள்கையை வகுத்திட கல்வியாளர்கள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மாற்று கருத்துக்களை உள்வாங்கி, விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும். தமிழக அரசு முன்வைத்துள்ள உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுமானால், அத்திட்டம் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் முழு ஒத்துழைப்பை வழங்கும்.

Related Stories: