காஞ்சியில் நாளை தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 7வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமுக்கும் செவிலியர்கள், தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய் துறையை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது.

எனவே, முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தவறாது 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். முதல் தவணை போடாதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள். கொரோனாவை தடுப்பதற்கு நமது  கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. குறிப்பாக, ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: