டயர் பற்றாக்குறையால் தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கும் என்று வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!!

சென்னை : டயர் பற்றாக்குறையால் போக்குவரத்துக் கழகங்களின்  தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கும் என்று செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.

தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்  டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் , இதனால்  தீபாவளிக்கு தடையில்லா பேருந்து சேவைகளை  முழுமையாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்துக்  கழகம் (எம்டிசி) மற்றும் பிற போக்குவரத்துக்  கழகங்களால் இயலாத நிலை  ஏற்படும்  என்று பல்வேறு ஊடகங்களில் உண்மை நிலையை ஊர்ஜிதப்படுத்தாத  செய்தி வெளியாகி உள்ளது .

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை , போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்க  தேவையான டயர் ஃப்ளோட்டை விட   அதிகமாக இருப்பதால் தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும் என  போக்குவரத்துத்  துறை, இதன் மூலம் ஊடக சகோதரத்துவத்திற்கு இந்த செய்தியினை பதிவு செய்கிறது.

 15,997புதிய டயர்கள்  மே-2021 முதல் தற்போது  வரை வாங்கப்பட்டுள்ளது  . மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும்  நிலையில் உள்ளது.இதனால் , தற்போதைய  நிலையில் , எந்த தடங்கலும்  இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்  கழகங்கள் ஏதுவான  நிலையில் இருப்பதை இது காட்டுகிறது. பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து , பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன.

அரசு போக்குவரத்துக்  கழகங்களிடம் அனைத்து பேரூந்துகளையும் முழுமையாக  இயக்க தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள் போதுமான அளவிற்கு  இருப்பதால்,  தற்போதும் மற்றும் தீபாவளி பண்டிகையின் போதும்  அனைத்து தடப் பேருந்துகள்  மற்றும்  சிறப்பு பேருந்துகளை   சீராக இயக்க முடியும்  என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: