தரங்கம்பாடி அருகே கடற்கரையில் ஒதுங்கிய அலையாத்தி மரக்கன்றுகள்-நடவு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கடற்கரையில் அலையாத்தி மரக்கன்றுகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. அவற்றை எடுத்து ஆறு மற்றும் கடல் ஓரங்களில் நடவு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடற்கரை மற்றும் ஆறு ஓரங்களில் அலையாத்தி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து கரையில் மண் அரிப்பை தடுப்பதோடு அரணாக இருந்து பாதுகாக்கிறது. நேற்று தரங்கம்பாடி அருகே உள்ள சின்னூர்பேட்டை கடற்கரையில் ஏராளமான அலையாத்தி மரக்கன்றுகள் கரையில் ஒதுங்கி கிடக்கின்றன.

இவைகள் பிச்சாவரம் கடற்பகுதியியில் இருந்து தண்ணீரில் அடித்து வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அலையாத்தி மரக்கன்றுகளை உடனே நடவு செய்தால் அது வளர்ந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே ஆறு மற்றும் கடல் ஓரங்களில் இந்த மரக்கன்றுகளை எடுத்து நடவு செய்யும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: