பண்டிகைக்கு பிறகு கொரோனா அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புத்தாடைகளை வாங்கி செல்ல காலை முதலே பொதுமக்கள் வருவதையும், நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும், ஞாயிற்றுக்கிழையன்று கூட்டம் கூடுதலை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றாததையும் காண முடிகிறது.

இதுபோன்ற நிலைமை கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழி வகுத்துவிடும். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனா தொற்றின் தாக்கம் பண்டிகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இதுகுறித்து விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

Related Stories: