நவம்பர் 1ம் தேதி முதல் 23 ரயில்களில் ரிசர்வேஷன் இல்லை: மக்கள் முன்பதிவு இன்றி பயணிக்கலாம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020-21 ஆண்டுகளில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே சார்பில் 23 ரயில்களில் நவ.1ம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை: பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 23 ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில்களில் நவ.1ம் தேதி முதல் பயணிகள் பயணிக்கலாம். அதன்படி திருவனந்தபுரம்- திருச்சி (02628), ரயில்கள் 4 பெட்டிகளும், ராமேஸ்வரம்- திருச்சி (06849,06850) இந்த ரயில்களில் 4 பெட்டிகளும்,  சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை (06089, 06090) இந்த ரயில்களில் 6 பெட்டிகளும், பாலக்காடு டவுன்- திருச்சி (06843, 06844) இந்த ரயில்கள் 6 பெட்டிகளும், கன்னூர்- கோவை ( 06607, 06608) 4 பெட்டிகளும், நாகர்கோவில் - கோட்டயம் (06366) இந்த ரயில்களில் 5 பெட்டிகளும் உள்ளிட்ட 19 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் வரும் 1ம் தேதி முதல் பொதுமக்கள் முன்பதிவின்றி பயணம்  செய்யலாம்.அதைத் தொடர்ந்து மங்களூர்- கோவை (06323, 06324) இந்த ரயில்களில் 4 பெட்டிகளும், நாகர்கோவில்-கோவை ( 06321, 06322)  4 முன்பதிவில்லா பெட்டிகளும்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நவம்பர் 10ம் தேதி முதல் இயக்கப்படும்.  மேலும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில்  2-எஸ் சாதாரண டிக்கெட்டுளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.  அதைப்போன்று திருவனந்தபுரம்- திருச்சி (02628) இந்த ரயிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

Related Stories: