ஐடி ரெய்டில் 23 கோடி சிக்கியது: ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 100 கோடி கருப்பு பணம்

புதுடெல்லி: நாசிக்கின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 100 கோடி கருப்பு பணம் சிக்கியது. இதில் கணக்கில் வராத 23 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தில் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21ம் தேதி ரெய்டு நடத்தினர். இதில் 100 கோடி கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில், ‘கருப்பு பணம் பதுக்கிய நபர்கள் அவற்றை மிகப்பெரிய அளவிலான நிலங்களை வாங்குவதில் முதலீடு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மகாராஷ்டிராவின் பஸ்வந்த் பிராந்தியம் பிம்பல்கான் பகுதியில் வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பயிர் மொத்த வியாபாரம் செய்பவர்கள். கருப்பு பணம் பதுக்கியதற்கான முக்கிய ஆவணங்கள், மிகப்பெரிய அளவிலான பண பரிவர்த்தனை ஆதாரங்கள் சிக்கி உள்ளது. அவர்களின் பல்வேறு வங்கி லாக்கர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த ரெய்டில் 100 கோடி கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. ரொக்கமாக 23.45 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>