கஞ்சா கடத்தல் இருவர் கைது

திருத்தணி: திருத்தணி போலீசார் நேற்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கினர். சோதனையில் வாகனத்தில், 100 கிராம் கஞ்சபெட்டலங்கள், 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த சாந்தி(37), விஷ்ணு(21) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>