பேரணாம்பட்டு அருகே அவலம் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு :  பேரணாம்பட்டு அருகே கழிவு நீர்கால்வாயை முறையாக அவ்வப்போது தூர்வாரவும், கான்கீரீட் கரை அமைக்கவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா, பேரணாம்பட்டு பொது நூலகம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில், மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நூலகத்தை சுற்றி அசுத்தமாகவும், குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் தொல்லையும் அதிகளவில் காணப்படுகிறது.

மேலும், கழிவு நீர்கால்வாய் கரை சிமெண்ட் கான்கீரிட்டால் அமைக்கப்படாமல் மண்ணால் உள்ளது. இதனால், மழைகாலங்களில் கால்வாய் கரையில் உள்ள மண் முற்றிலும் கால்வாயில் சரிந்து விடுகிறது. ஏற்கனவே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கும் நிலையில், கால்வாயில் மண் சரிந்து முற்றிலும் கழிவுநீர் அடித்து செல்லாமல் தேங்கி நிரம்பி தெருக்களில் வழிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கால்வாயை முறையாக அவ்வப்போது தூர்வாரவும், கால்வாய் கரையில் நிரந்தரமாக கான்கீரிட் கரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: