சென்னை: தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, பிஎஸ்சி(நர்சிங்), செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு, பிபிடி, பிஎஸ்இ ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மனரி பர்பியூஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பயரேட்டரி தெரபி, பிஓடி, பிஆப்டம், பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.