இது வேற லெவல்.! சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் ‘டின் பீர்’ பட்டாசுகள்: இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு

சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது. பட்டாசு பிரியர்களை கவரும் வகையில் புதுப்புது வகையிலான பட்டாசுகளை உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் தான் நினைவிற்கு வரும். இனிப்பானது சாப்பிடுபவருக்கு மட்டும்தான் ருசி தெரியும். புத்தாடையானது அதை அணிவோர்தான் மிடுக்காக தெரிவார்கள். ஆனால் பட்டாசுதான் வெடிப்போரையும், அதை கண்டு ரசிப்போரையும் பரவசப்படுத்தும். சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உபட்ட விருதுநகர் மாவட்டத்தில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆலைகளும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆண்டுக்கு ஆண்டு புதுமைகளை புகுத்தி பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரித்து வருகின்றன. இந்த ஆண்டு பட்டாசு பிரியர்களை கவரும் வகையில் கடைகளில் புது ரக பட்டாசுகள் அணிவகுக்கின்றன. 200க்கும் மேற்பட்ட ரகங்களில் வித, விதமான பட்டாசுகள் உள்ளன.

‘டின் பீர்’ வடிவிலான பட்டாசுகள்

பார்க்க அப்படியே ஒரிஜினல் டின் பீர் மாதிரியே உள்ள இந்த பட்டாசுகள், முன்னணி பிராண்டுகளின் தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகளில் பார்த்தவுடன் டின் பீரா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டாசுகள் பூச்சட்டி ரகம் போன்று தயாரிக்கப்பட்டுள்ளன. டின் பீர் போன்று மேலே ஓப்பன் செய்து அதில் உள்ள திரியை பற்ற வைத்தால் 15 அடி வரை உயரம் சென்று  பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் பொறிப்பொறியாய் பீறிட்டு மினுமினுக்கும். இளைஞர்களை கவரும் வகையில் இந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வெடி இந்த வருட தீபாவளியை வேறு லெவலுக்கு கொண்டு செல்ல போகிறது. இந்த வகை பட்டாசுகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

கோல்டன் லயன்

சிறுவர், இளைஞர்களை கவரும் வகையில் கோல்டன் லயன் என்ற மெகா சைஸ் புஸ்வாணம், சிங்கம் வடிவில் கோல்டன் கலரில் கிராக்கிளின் சத்தத்துடன் 2 நிமிடம் வரை வெடித்து சிதறும் வகையில் வடிமைக்கப்படுள்ளன.

3 கலர் பெண்சில் பட்டாசுகள்

சிறுவர்கள் வெடித்து மகிழும் வகையில் 3 வண்ணங்களில் வெளியாகும் 3 கலர் பென்சில் பட்டாசுகள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டாசுகள் இந்த ஆண்டு சிறுவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

டைனி டாட்ஸ்

டைனி டாட்ஸ் எனப்படுவது பட்டாம்பூச்சி வெளிவருவது போன்ற பட்டாசுகள். இது பட்டாசு பிரியர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவ்வகை பட்டாசுகள் பட்டாசு மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

பாம் பாம் பட்டாசு

இந்த புதிய ரக பட்டாசுகள், கையில் வைத்தபடி ஒலி எழுப்பும். பாம் பாம் மற்றும் பாப் கான் வடிவில் வெளியாகும் பாப்கான் புஷ் வாணம் இந்த ஆண்டு சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்பின்னர்ஸ் தரை சக்கரம்

சிறுவர்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட ஸ்பின்னர்ஸ் என்ற பச்சை நிற தரை சக்கரம் புதிய வரவாக உள்ளது

போட்டோ  பிளாஷ் பட்டாசுகள்

போட்டோ பிளாஷ் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான பட்டாசு. கேமரா வடிவில் உள்ள இவ்வகை பட்டாசுகளில் மேல் பகுதியில் உள்ள திரியை பற்ற வைத்தால் போட்டோ எடுக்கும் போது ஏற்படும் பிளாஷ் போன்று டப், டப் என்று கலர் கலராய் மின்னும். இதுபோன்று பலரக பட்டாசுகள், பேன்சி ரக வெடிகள் தீபாவளியை குஷிப்படுத்தி குதூகலிக்க தயாராகியுள்ளது

கிஃப்ட் பாக்ஸ்கள் விற்பனை

மக்கள் விரும்பும் அனைத்து பட்டாசுகளும் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 33 வகையான கிஃப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கிஃப்ட் பாக்ஸ்களில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, தரை சக்கரம், புஸ்வாணம், கார்ட்டூன் வெடிகள் என 25க்கும் மேற்பட்ட பட்டாசுகள், பெண்களை கவரும்விதமாக தரை சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள், இளைஞர்களை கவரும் விதமாக புல்லட் பாம், ஆட்டம் பாம், அணுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட்  வெடிகள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. கிப்ட் பாக்ஸ்கள் ரூ.350 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

Related Stories:

More
>