மத்திய அரசிற்கு அழுத்தம் தந்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் : ஈபிஎஸ்

சென்னை : இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர்  குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை - கோட்டைப்பட்டினம்  மீன்பிடி துறைமுகத்திலிருந்து 3 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ராஜ்கிரண்(28) என்ற மீனவர் இறந்ததாக அறியப்பட்டு நீண்டபோராட்டத்திற்கு பிறகு இன்று (23.10.2021) இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் கொண்டுவரப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 39 மக்களவை உறுப்பினர்களும், ஒரே குரலில் தமிழக கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களையும், தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதையும் ஒருமித்த குரலில், உரிய  முறையில் நாடாளுமன்றத்தில் பேசி, மத்திய அரசிற்கு அழுத்தம் தந்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>