கத்தியுடன் சுற்றிய மாணவர்கள் கைது

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக நேற்று செங்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசை கண்டதும் அங்கிருந்த 4 பேர் தப்பித்து ஓடினர்.  உடனே அங்கிருந்த மற்றொரு 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி இருந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரைபட்டு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கலையரசன்(19), சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு மாணவர். கடந்த வாரம் சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரிந்தது. மற்றொருவர் திருவிக நகரை சேர்ந்த கேசவன்(19), அதே கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>