நகராட்சி மார்க்கெட் நுழைவுவாயில் பகுதியில் பள்ளம்

ஊட்டி:  ஊட்டி மார்க்கெட் நுழைவுவாயில் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், லோயர் பஜார் சாலையில் மாரியம்மன் கோயில் செல்லும் சாலை சந்திப்பு அருகே உள்ள மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து போய் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழை காரணமாக பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மார்க்கெட் வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள நடைபாதையில் உள்ள இன்டர்லாக் கற்கள் தேய்ந்து போயும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், மழை பெய்யும் போது சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மார்க்கெட் வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: