சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்றது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பெரும்பள்ளம் அணை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (68). இவர், 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் ரங்கசாமி, ஆடுகள் மேய்ந்த பின், வீட்டின் புன்புறமுள்ள கொட்டகையில் கட்டி வைப்பார். நேற்று முன்தினமும் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச்சென்று கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்கச் சென்றார். அதிகாலையில் ஆடுகள் மரண பயத்தில் அலறி சத்தம் போட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ரங்கசாமி எழுந்து கொட்டகையை பார்த்தார்.

அப்போது அங்கு சிறுத்தை புகுந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரங்கசாமி சத்தம் போட்டார். ரங்கசாமியை பார்த்த சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் மறைந்து விட்டது. பின்னர், அருகில் சென்று பார்த்தபோது 7 ஆடுகளின் குரல்வளையை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்துள்ளது. இதனால், 7 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதுதவிர, அங்கு 3 ஆடுகள் கழுத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடியது. சிறிது நேரத்தில் அந்த 3 ஆடுகளும் பலியானது.

Related Stories:

More
>