கண்களை பாதுகாப்பது எப்படி?...150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்பு

சென்னை: உலக பார்வை தினம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடைபெற்ற உலக பார்வை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்களை பாதுகாக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்னென்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையின் வெளியே ‘உங்களின் கண்களை நேசியுங்கள்’ என்ற கோட்பாட்டுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் தொடங்கி வைத்தார். அப்போது கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரகாஷ், சமூக கண் மருத்துவம், மற்றும் கண் நரம்பியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள், உதவி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்சுகள், விழி ஒளி பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 150 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>