சேலம் சங்கர்நகரில் ஜெயின் கோயில் பூமிபூஜை விழா

சேலம்: சேலம் சங்கர்நகரில் புதியதாக ஜெயின் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான  பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு  விமல்சாகர்ஜீ தலைமை தாங்கினார். ஜெயின் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை சுமங்கலீ ஜூவல்லரி உரிமையாளரும், கோயில் அறங்காவலருமான புரண்சந்த்ஜீ கூறியதாவது: எனது தாத்தா பன்னாலால்ஜீ கோதம்சந்ந் குடும்பத்தின் சார்பில் இக்கோயில் கட்டப்படுகிறது. இக்கோயில் முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்படுகிறது.

இதற்கான கற்சிலைகள் மற்றும் மார்பிள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது. இங்கு தினசரி காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். சாதி, மத பேதமின்றி அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கலாம். இங்கு வருபவர்கள் கண்டிப்பாக அசைவ உணவு உண்ணக்கூடாது. கோயில் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். இதனை ஜெயின் மதகுரு மணிபிரப் சாகர்ஜீ திறந்து வைப்பார். விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: