அண்ணாத்த டீசர் 14ம் தேதி வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வருகிற 14ம் தேதி வெளியிடப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்த மூன்றாவது படைப்பாக உருவாகி உள்ள படம் அண்ணாத்த. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படம் தீபாவளி தினத்தன்று, வரும் நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அண்ணாத்த டீசர் வெளியாக போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். ஏற்கனவே வெளியிடப்பட்ட அண்ணாத்த படத்தின் இரு பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் வெளியாக இருக்கிறது.

Related Stories: