புகையிலை பயன்படுத்த சட்டபூர்வ வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு எழுதியுள்ளகடிதத்தில் கூறியிருப்பதாவது: உணவகங்கள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கென தனி பகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் மூலம், அந்த இடங்களில் புகைப்பிடிக்க 2003ம் ஆண்டின் சட்டம் அனுமதிக்கிறது. இந்தப் பிரிவு அகற்றப்பட வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் அவை குறித்த விளம்பரங்களோ, அப்பொருட்களை பார்வைக்கு வைப்பதோ கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ வயது 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட வேண்டும். கிரிக்கெட் போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பின் போது சிகரெட், பீடி மற்றும் புகையில்லாத புகையிலைப் பொருட்கள் மறைமுக விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும். சட்டத்திருத்த மசோதா 2020ஐ வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இந்தச் சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளும் களையப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: