தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள் புனரமைக்க ரூ.189.80 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள் புனரமைக்க ரூ.189.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 9 உபவடிநிலங்களில் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள், 16 செற்கை முறையில் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இப்பணிகள் 25 பேக்கேஜ் பணிகளாக பிரித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழு உலக வங்கியிடம் ஒப்புதல் பெற்றது. தற்போது இதற்காக ரூ.189.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி செய்யாறு உபவடிநிலத்தில் 14875 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.85 கோடியில் 3 பேக்கேஜ் பணிகளும், சின்னாறு உபவடிநிலத்தில் 4337 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடியில் 3 பேக்கேஜ் பணிகளும், கும்மிடிப்பூண்டி உபவடிநிலத்தில் 1672 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.7.5 கோடியில் 2 பேக்கேஜ் பணிகளும், மணிமுக்தா உபவடிநிலத்தில் 2830 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடியில் 3 பேக்கேஜ் பணிகளும், முசுக்குண்டாநதி.

வடிநிலத்தில் 897 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.5.3 கோடியில் 2 பேக்கேஜ் பணிகளும், பரவனாறு உபவடிநிலத்தில் 3645 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.10.48 கோடியில் 3 பேக்கேஜ் பணிகளும், வேகவதி உபவடிநிலத்தில் 5221 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.26.5 கோடியில் 4 பேக்கேஜ் பணிகளும், மருதையாறு உபவடிநிலத்தில் 2101 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.9.99 கோடியில் 3 பேக்கேஜ் பணிகளும், நம்பியாறு உபவடிநிலத்தில் 1312 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.8 கோடியில் 2 பேக்கேஜ் பணிகள் என மொத்தம் 36893 ஹெக்டேர் பயன்பெறும் வகையில் ரூ.189.80 கோடியில் 25 பேக்கேஜ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது.

Related Stories: